Not going to change now!
ச்ச்ரிப்டுரே வேத வசனம் : உபாகமம் 2:7 உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
ஒப்செர்வதியன் கவனித்தல் : மோசே இஸ்ரவேல் ஜனங்களோடே இதுவரை வாடந்தவைகளை ஆராய்ந்து பார்க்கிறார். அவர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் இருந்தனர். தேவன் அவர்களை ஆசிர்வதித்திருந்தார் . தேவன் அவர்களை பாதுகாத்தார். எல்லா நேரங்களிலும் தேவன் அவர்களோடு கூட இருந்தார். அவர்களுக்குத் தேவையான எல்லாம் (தண்ணீர், உணவு, உடை) தேவன் அவர்களுக்கு அருளினார். அவர்களுடைய வரலாறு தேவன் அவர்களுக்கு செய்த அற்புதங்களால் நிறைந்திருந்தது.
Application பயன்பாடு : நான் கடந்த நாற்பது வருடங்களைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, எனது வாழ்க்கையும் கூட அவருடைய அற்புதங்களால் நிறைந்த ஒரு வாழ்க்கையாகவே இருக்கிறது. அவர் என்னை ஆசிர்வதித்திருக்கிறார். அவர் என்னை பாதுகாத்திருக்கிறார். அவர் என்னோடு கூட இருந்திருக்கிறார். அவர் எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறார்.
prayer ஜெபம்: கர்த்தாவே, முவைரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு நிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு உம்மை நிரூபித்தது போலவே கடந்த நாற்பது வருடங்களாக என்னிடம் உமது உண்மையை நிருபித்திருக்கிறிர். நீர் இனிமேலும் மாறப்போவதில்லை. உமக்கு நன்றி.. ஆமென்.
No comments:
Post a Comment