Scripture வேதவசனம்: சங்கீதம் 36:7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
Observation கவனித்தல்: இந்த சங்கீதத்தில் தேவனின் தனமைகளைக் கூறி சங்கீதக்காரன் தேவனை துதித்து ஆராதிக்கிறார். இந்த வசனத்தில் தேவனின் அன்பு மாறாததும் விலைமதிப்பற்றதுமானது என்று கூறுகிறார். மாறாத அன்பை மதிப்பிடுவது இயலாத காரியம் ஆகும். இதுவரைக்கும் அன்பைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களில் எல்லாம் சிறந்தது, தேவனின் அன்பைக் குறித்து எழுதப்பட்டதே ஆகும்.
Application பயன்பாடு: நான் தேவனாம் நேசிக்கப்படுகிற படியால், நான் அளவிடப்பட முடியாத ஆஸ்தியை உடையவனாக இருக்கிறேன். அவர் என்னை மாறாத, விலைமதிப்பிடமுடியாத நேசத்தால் என்னை நேசிக்கிறார். என்னிடத்தில் குறை உண்டென்றாலும் அவர் என்னை நேசிக்கிறார், அவருடைய உதவியினால் நான் மற்றவர்களையும் நேசிக்க முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் நேசத்துக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்? நான் திரும்பவும் உம்மை நேசித்து, உம்மைப் பிரியப்படுத்துகிறவைகளைச் செய்ய முயற்சித்து என் அன்பை நிரூபிப்பதே என்னால் செய்யக் கூடிய செயல் ஆகும். ஆமென்.
No comments:
Post a Comment