Scripture வேதவசனம்: Mark 14:8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
Observation கவனித்தல்: இந்தப் பெண் இயேசுவின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தாள். அவர் ஒரு செல்வந்தரின் வீட்டில் உணவருந்த ஒரு விருந்தினராகச் சென்றிருந்த வேளையில், விலையேறப்பற்ற பரிமளதைலக் குப்பியைத் திறந்து, அதை அவர் தலையில் ஊற்றினாள். அந்த தைலத்தின் நறுமணம் அந்த அறையெங்கும் நிரம்பி, எல்லோரும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டனர். அந்தப் பெண் செய்த செயல் ‘வீண் செலவு’ என்று எல்லோரும் குறை கூறினர். அதை அவள் விற்று , அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்க முடியும். ஆனால் இயேசு அவள் செய்த செயலை நியாயப்படுத்தினார். அவருடைய அடக்கத்துக்கு ஆயத்தமாக அதை அவள் செய்தாள் எனக் கூறினார். சில நாட்கள் கழிந்த பின். இயேசுவின் சரீரத்திற்கு வாசனைத்திரவியங்களைப் பூசும்படி சில பெண்கள் அவருடைய கல்லறைக்குச் சென்றனர். ஆனால் அவர் அதற்கு முன்பாகவே உயிர்த்தெழுந்து விட்டார். இந்தப் பெண் மாத்திரமே இயேசுவின் மேல் வாசனைத் தைலத்தை ஊற்ற முடிந்தது.
வேதாகமம் கூறும் அனேக அற்புதங்களில், மனிதனின் பங்கையும் தேவனின் பங்கையும் நாம் காண்கிறோம். மனிதனின் செயலால் மாத்திரம் அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நாம் நம்பிவிடக் கூடாது. தேவனின் பங்கு இருப்பதாலேயே அவை நடக்கின்றன. மனிதன் செய்ய வேண்டியவைகளைச் செய்வதைத் தொடர்ந்தே தேவனின் செயலும் நடைபெறுகிறது. மனிதனின் பங்கு என்பது, அவனால் செய்யக் கூடியதைச் செய்வது என்பதாகும். “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.”
Application பயன்பாடு: என்னால் செய்யக் கூடியதைச் செய்ய நான் விருப்பமுடையவனாக இருக்க வேண்டும். நான் ஜெபிக்க முடியும். நான் சென்று இயேசுவின் நாமத்தில் தொட முடியும். என்னிடம் இருப்பதை நான் கொடுக்க முடியும். நான் தாழ்மையுடன் என்னால் செய்ய முடிவதைச் செய்து, இயேசு அவர் செய்யக் கூடியவைகளைச் செய்வார் என்று இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் செய்யக் கூடியவைகளை எல்லாம் விசுவாசித்து, நான் செய்யக் கூடியவைகலைச் செய்ய எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment