Thursday, March 8, 2012

SOAP 4 Today - அவரை நான் இழந்துவிடக் கூடாது


Scripture வேதவசனம்: மாற்கு 15:15 அப்பொழுது பிலாத்து ஜனங்களை பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

Observation கவனித்தல்: பிலாத்துவா? அல்லது அங்கு கூடியிருந்த மக்களா? யார் அதிகாரத்தில் இருந்தனர்? பிலாத்து தன் அதிகாரத்தை ஜனங்களிடம் இழந்துவிட்டான். இது மிகப் பெரும் தவறு ஆகும். மற்றவர்களை திருப்திப்படுத்துவது தவ்று அல்ல, ஆனால் அதற்காக நாம் இயேசுவை இழந்துவிடக் கூடாது.

Application பயன்பாடு: நான் யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறேன்? நான் என்னையோ அல்லது மற்றவர்களையோ திருப்திப்படுத்தும் போது அவரை நான் இழந்து விடுகிறேனா?

Prayer ஜெபம்: கர்த்தாவே, இந்நாளின் இறுதியில், நான் உம்முடனே இணைந்து இன்று நடந்தவைகளை எல்லாம் திரும்பிப் பார்த்து, நன்றாகவே வாழ்ந்தேன் என்று சொல்லுமளவுக்கு இருக்க உதவும். ஆமென்.


No comments:

Post a Comment