Thursday, March 8, 2012

SOAP 4 Today - என் பரிபூரண தேவன்

Scripture வேத வசனம்: உபாகமம் 10: 17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
18. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
19. நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.

Observation கவனித்தல்: மோசேயின் வாழ்க்கை முடியப் போகிறது என்பதை கர்த்தர் அவனிடம் கூறியிருந்தார். ஆகவே தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்குச் செய்தவைகளையும், வனாந்திரத்தில் அவர்கள் பயணத்தில் அவர்களோடு கூட அவர் இருந்ததையும் திரும்பவும் எண்ணிப் பார்க்கிறான். அவர்களுடைய வரலாறையும், தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டவைகளையும் திரும்பவும் கூறி, அவர்களை வழி நடத்தி வந்தவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைக் கூறுகிறார்.

Application பயன்பாடு: இஸ்ரவேலின் தேவனே என் தேவன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் வல்லவரும், ஆச்சரியமுமானவர். அவரை யாரும் ஏமாற்ற முடியாது. அவர் பட்சபாதமற்றவர், எவரும் அவருக்கு லஞ்சம் கொடுக்கமுடியாது. அவர் முற்றிலும் நீதிபரர். அவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். இவரே என் பரிபூரணமான தேவன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீரே எனக்கான பரிபூரணமான தேவன். நீர் என்னை முற்றிலும் அறிந்திருக்கிறீர். நீர் என் தேவைகளையும், அவைகளை எப்படி எனக்கு அளிப்பது என்பதையும் அறிந்திருக்கிறீர். உம்மை நான் சார்ந்து உமக்குச் சொந்தமானவனாக இருப்பதில் மிகவும் ஆசீர்வாதமுடையவனாக நான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment