Thursday, March 29, 2012

SOAP 4 Today இது ஒரு தலைமுறையின் நினைவுகள்!

வசனம் : சங்கீதம் 44:1 தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.


கவனித்தல் : ஒருவர் இந்த சங்கீதம் முழுவதையும் வாசிக்கும் போது அங்கு பிரச்சனையை கண்டுகொள்கிறார். தேசம் தாக்குதலின் கீழ் இருக்கிறது. தேவன் கடந்த தலைமுறைக்காக நடப்பித்த கிரியைகளை கேட்டறிந்ததினால், இங்கு சங்கீதக்காரன் உற்சாக படுத்தப்படுகிறார். .

பயன்பாடு : தேவன் மற்றவர்களுக்காக முடித்திருக்கும் காரியங்களை கேட்பது நல்லது. .அது என்னுடைய விசுவாசத்தை கட்டுகிறது. மற்றும் தேவன் எனக்காக முடித்திருக்கும் காரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மிகவும் மகிழ்சியாக உள்ளது. அது அவர்களுடைய விசுவசத்தை கட்டுகிறது. தேவன் எவ்வாறு தங்களை வழிநடத்தி போஷித்தார் என்பதை தங்கள் குழந்தைகள் அறியச் செய்வது ஒவ்வொரு தலைமுறைக்கும் நல்லது.
ஜெபம் : தேவனே, நீர் எனக்குச் செய்தவைகளை உண்மையான மனதுடன் அடுத்த தலைமுறைக்குச் சொல்வதன் மூலம் நான் உம் மீது வைத்திருக்கும் மதிப்பை காண்பிக்க முடியும். ஆமென்.

No comments:

Post a Comment