Scripture வேதவசனம்: கொரிந்தியர் 16:8 ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
9. ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
Observation கவனித்தல்: ஒன்றை விட்டுவிட அல்லது விலக எதிர்ப்பு ஒரு அடையாளம் அல்ல. தேவன் கிரியை செய்கிறார் என்பதற்கு எதிர்ப்பு ஒரு அடையாளமாக இருக்கக் கூடும். சத்துரு இதை விரும்புவது இல்லை.
Application பயன்பாடு: நான் செய்யவேண்டும் என்று தேவன் எனக்குச் சொல்லி இருப்பவைகளைச் செய்யும்போது, நான் எதிர்ப்பைக் கண்டால் ஆச்சரியப்படக் கூடாது. எதிர்ப்பு விட்டுவிடுவதற்கு ஒரு காரணம் அல்ல. எதிர்ப்பு என்பது தேவன் மட்டுமே செய்யக் கூடியவைகளை அவர் செய்வதற்கு வாய்ப்பைத் தருகிறது. அவர் மட்டுமே செய்யக் கூடியதை அவர் செய்யும்போது, நான் பெறுகிறேன், அவர் மகிமையடைகிறார். நான் எதிர்ப்பைக் காணும்போது மகிழ முடியும். எனக்காக தேவன் சிறப்பான ஒன்றை செய்வதற்கான அடையாளமாக எதிர்ப்பு இருக்க முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, எதிர்ப்பை சந்திக்கும்போது சோர்ந்து போகாதபடிக்கு என் இருதயத்தை நிலை நிறுத்தும். என் நன்மைக்காகவும், உம் மகிமைக்காகவும் நீர் எதிர்ப்பின் மூலமாக செயல்பட முடியும் என்று விசுவாசிக்கிறேன். ஆமென்!
No comments:
Post a Comment