Monday, April 2, 2012

SOAP 4 TOday - தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுதல்

Scripture வேதவசனம்: 2 கொரிந்தியர் 3:6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

Observation கவனித்தல்: இங்கு “எழுத்து “ என்று குறிப்பிடப்படுவது மோசேக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் ஆகும். அதில் 10 கற்பனைகளும் அடங்கும். நான் தவறு செய்திருக்கிறேன் என்பதை “எழுத்து” காட்டலாம், ஆனால் நான் சிறப்பாக செயல்பட அது எனக்கு உதவ முடியாது. ஆனால் எனக்குள் வசிக்கிற பரிசுத்த ஆவியனவர் தேவன் விரும்புகிறவைகளை நான் அறிந்து கொள்ளவும், அதின் படி வாழவும் எனக்கு உதவ போதுமானவராக இருக்கிறார்.

Application பயன்பாடு: நான் தேவனின் பிரமாணத்தை எவ்வாறு மீறியிருக்கிறேன் என்பதையும் நான் எப்படி தண்டிக்கப்படத்தக்கவனாக வாழுகிறேன் என்பதையுமே தேவனுடைய பிரமாணத்தில் காண்கிறேன். ஆனால் என் பாவங்களுக்காக மரித்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நான் ஏற்றுக் கொள்ளும்போது, அவருடைய மன்னிப்பை பூரணமாகப் பெறுகிறேன். மன்னிக்கப்பட்டும், என் சுய பெலத்தை சார்ந்து இருக்கும்போது நான் மறுபடியும் பாவத்தில் விழுந்துவிடுகிறேன். ஆனால் நான் எனக்குள் வசிக்கிற பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து வாழும்போது, பாவ சோதனையை மேற்கொள்கிறேன். (தேவனுக்கு ஸ்தோத்திரம்) . பாவத்தைப் பற்றிய அறிவை தேவனுடைய பிரமாணம் மூலமாக நான் பெறுகிறேன். தேவகுமாரனாகிய இயேசுவின் மரணம் எனக்கு பாவ மன்னிப்பைத் தருகிறது. எனக்குள் வசிக்கும் தேவ ஆவியானவர் பாவத்தை வெல்ல வல்லமையை தருகிறார்.

Prayer ஜெபம்: பரலோகப்பிதாவே, என்னைப் புரிந்து, எனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவதற்காக உமக்கு நன்றி. நீர் மிகவும் ஆச்சரியமானவர்! ஆமென்!

No comments:

Post a Comment