Tuesday, April 3, 2012

SOAP 4 Today - பொக்கிஷம்

Scripture வேதவசனம்: 2கொரிந்தியர் 4:7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

Observation கவனித்தல்: ஒரு பலவீனமான பாத்திரத்திலிருந்து இப்படிப்பட்ட ஞானம் மற்றும் வல்லமை வெளிப்படுவதை ஒருவர் காணும்போது, அவருக்குள் ஏதோ ஒரு ஆச்சர்யமானது இருக்கிறது என்று கண்டு கொள்வார். நம்மால் செய்ய முடியாதவைகளை தேவன் நம் மூலமாகச் செய்யும்போது அதற்கான உரிமையை தேவனுக்கு மாத்திரமே போக வேண்டும். நம் வாழ்க்கையில் காணப்படவேண்டிய மிக முக்கியமான பொக்கிஷம் அவரே.

Application பயன்பாடு: என்னால் செய்ய முடியாத பல சமயங்களில் தேவன் எனக்கு உதவி இருக்கிறார். அவரால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அவர் எனக்குள் இருப்பதைக் காண நான் விரும்பினால், என்னால் செய்யமுடியாத சூழ்நிலைகளுக்குச் செல்ல நான் விருப்பம் உள்ளவனாக இருக்க வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மைச் சேர்ந்தவன். உம் மகிமைக்காக என்னை பயன்படுத்தும். நீர் என்னில் சிறப்பாக வெளிப்படக் கூடிய இடங்களுக்கு என்னை அனுப்பும். நீர் என் மூலமான செய்தவைகளுக்கு மக்கள் என்னைப் பாராட்டும்போது, நான் உண்மையுள்ளவனாக இருந்து உடனே உமக்கு மகிமையைத் தர எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment