Scripture வேதவசனம்:
2 சாமுவேல் 21:14 சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும்,
பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில்
அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்;
அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக்
கேட்டருளினார்.
Observation கவனித்தல்: நாம் அனைவருமே இப்படிப்பட்ட”ஜெபம் கேட்கப்படும்” அனுபவத்தை நம் வாழ்வில் பெற்றிருக்கிறோம்.
இப்படிப்பட்ட அனுபவங்களில் நாம் தேவனின் பிரசன்னத்தைப் பெற்று களிகூர்கிறோம். ஆனால் நாம் சரியானவைகளைச் செய்த பின்பே இவைகளைப் பெறுகிறோம். நாம் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு பொறுப்பேற்கலாம். நம்மால் அதை மாற்ற முடியாது. ஆனால் தேவன் அதை மன்னிக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்கள் வருவதற்கு முன்பு, அனேக சமயங்களில் கடந்த காலம் என்பது முறையாக சாகடிக்கப்பட்டு அடக்கம் பண்ணப்பட வேண்டும்.
Application பயன்பாடு: 1. கடந்த காலத்தில் செய்த தவறுகளை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
2.நான் அதற்கு பொறுப்பேற்று, மற்றவர்களை குற்றம் சாட்டாமல் இருக்க வேண்டும்.
3. நான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். (தேவனுக்கு முன்பாக, இயேசு எனக்காகத் தேவையான நடவடிக்கையை எடுத்தார், நான் மனிதனுக்கு முன் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
4. நான் அதை புதைக்க வேண்டும். புதைப்பது என்பது அதை மறப்பது அல்ல. அதை எனக்குப் பின் வைத்தல் ஆகும். இப்போது என் தவறுகள் என் மனதில் தோன்றும்போது, அதை நான் முறையாக புதைத்துவிட்டேன் என்பதை நான் நினைக்க வேண்டும். என்னால் செய்யக் கூடிய காரியங்களுக்கு நானே பொறுப்பு. என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் நான் செய்துவிட்டேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் கடந்த காலத்தை எனக்குப் பின்னாக நான் வைக்க எனக்கு உதவினதற்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment