Scripture வேதவசனம்:
1 தெசலோனிக்கேயர் 3:9 மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து
அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய்
ஸ்தோத்திரம் செலுத்துவோம்?
Observation கவனித்தல்: பவுல் நன்றியுள்ள இருதயமுள்ளவராக இருந்தார். நியாதத்தீர்ப்பில் கர்த்தருக்குக்கு முன்பாக இருக்கப் போகிறதற்காக மாத்திரம் பவுல் நன்றியுடைய உள்ளவராக இருக்கவில்லை. இப்போது தெசலோனிக்கேயில் உள்ளவர்களினிமித்தம் அவர் தேவ சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறார்.
Application பயன்பாடு: கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சியாயிருக்க அனேக காரணங்கள் உண்டு. என் இருதயத்தைக் களிகூரப் பண்ணத் தூண்டும் தேவ சமூகத்தின் நினைவுகள் அனேகம் உண்டு. என் உள்ளத்தில் தேவன் பேசுவதற்குப் பயன்படுத்தின வேதாகம வார்த்தைகளை வாசிப்பது என்னை மகிழப் பண்ணுகிறது. பவுலைப் போல, என் வாழ்வில் தேவன் கொண்டு வந்திருக்கிற அனேக சிறப்பான மனிதர்களுக்க்கா மகிழ்வதற்கும் எனக்கு ஏராளமான காரணங்கள் உண்டு.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்வில் நீர் கொண்டு வந்திருக்கிற அனேக நண்பர்களுக்காக உமக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment