Thursday, July 12, 2012

SOAP 4 Today - எனக்காக

Scripture வேதவசனம்: எபிரேயர் 9: 12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

24 அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

Observation கவனித்தல்: மோசே மலையில் தான் பார்த்த மாதிரியின்படி வனாந்திரத்தில் ஆசரிப்பு கூடாரத்தைக் கட்டினான் (யாத்திராகமம்.25:9,40). ருசல்மில் கட்டப்பட்ட தேவாலயம் ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரியின் படி கட்டப்பட்ட நிலையான கட்டிடம் ஆகும். மனிதர்களால் கட்டப்பட்ட தேவாலயங்களில் மிருகங்களை பலி கொடுத்து வந்தனர். இயேசு நம் பாவங்களுக்காக மரித்த போது, அவர் மனிதர்களால் கட்டப்பட்ட கூடாரத்திற்குள் பிரவேசிக்காமல், பரலோகத்தின் உண்மையான தேவாலயத்தில் பிரவேசித்தார்.

Application பயன்பாடு: இயேசு பரலோகத்தின் எனக்காக இருக்கிறார். பூமியில் தேவ குமாரன், ஒரு மனுசகுமாரனாக உலாவினார். இயேசு நம் பரலோகப் பிதாவின் பிரதிநிதியாக இருந்தார். இப்போது பரலோகத்தில், பாவமற்றவராக, பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டவராக, உயிர்த்தெழுந்த தேவ குமாரனாக எனக்காக என் பரமப்பிதாவின் சமூகத்தில் இருக்கிறார். அங்கே அவர் நமக்காக இருக்கிறார். எனக்காக அவர் பரலோகத்தில் இருக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்காக நீர் செய்தவைகளை நான் அதிகமதிகமாக அறிந்து கொள்ளும்போது, அவை எனக்காக என்பதை அறிந்து ஆச்சரியமடைகிறேன். நான் “நன்றி” என்று மாத்திரம் சொல்வது போதுமானதாக இருப்பது. எனக்குள்ளதெல்லாவற்றிலும் உமக்காக நான் வாழ எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment