Scripture வேதவசனம்: எபிரேயர் 10:35 ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
Observation கவனித்தல்: எபிரேயர் கடினமான சில அனுபவங்களினூடாகச் சென்று இருந்தார்கள். அவர்கள் உண்மையாக இருக்கும்படி கட்டளையிடப்பட்டு, உற்சாகப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் பலனைப் பெறுவார்கள். அவர்கள் வாக்குப் பண்ணப் பட்டதைப் பெறுவார்கள். இயேசு திரும்ப வருவார். ஆகவே அவர்கள் நிகழ் காலத்தில் விசுவாசத்தினால் வாழ வேண்டும். அவர்கள் விசுவாசத்தினாலேயே ஆரம்பித்தார்கள், இப்போது அவர்கள் விசுவாசத்தைக் கொண்டே தொடரவேண்டும். அவர்கள் வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
Application பயன்பாடு: அனேக வருடங்களுக்கு முன்பு விசுவாசத்தினால் ஆரம்பித்த என் வாழ்க்கையை நான் இப்போது விசுவாச வாழ்க்கையினாலேயே தொடர வேண்டும். இப்போது என் சூழ்நிலைகள் மாறி உள்ளன. ஆனால் என் இரட்சகர் மாற வில்லை. அவருடைய வாக்குத்தத்தங்கள் மாற வில்லை. என் விசுவாசமும் மாறவில்லை. அது இன்னமும் உறுதியாகவே வளர்ந்து இருக்கிறது. என் சரீரம் பெலவீனமாக இருக்கலாம், ஆனால் என் விசுவாச ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, “ என் நம்பிக்கை இயேசுவின் இரத்தத்தின் மேலும் அவருடைய நீதியின் மேலும் கட்டப்பட்டிருக்கிறது. நான் வேறு எதையும் நம்பத் துணியாமல் இயேசுவை முழுவதுமாக சார்ந்து கொள்வேன்” என்று பாடுகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment