Thursday, August 9, 2012

SOAP 4 Today - Loved அன்பாயிருந்தார்

Scripture வேதவசனம்: யோவான் 11:3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
4. இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
5. இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
6. அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.

Observation கவனித்தல்: இயேசு லாசருவின் மேல் அன்பாயிருந்ததை சகோதரிகளான மார்த்தாளும் மரியாளும் அறிந்திருந்தனர். அச்சகோதரிகளையும் கூட இயேசு நேசித்தார் என்று 5ம் வசனத்தில் பார்க்கிறோம். ஆனால் நேசிக்கிறவர்களுக்கு செய்ய வேண்டியதை எதிர்பார்த்தபடி இயேசு இன்னும் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டு, உடனடியாக இயேசு ஓடி வரவில்லை. அவர் தன் பயணத்தை தாமதப்படுத்தவே செய்தார். இயேசு வந்த நேரத்தைக் குறித்த அதிருப்தியை சகோதரிகள் வெளிப்படுத்தினர். இயேசு மட்டும் சீக்கிரத்தில் வந்திருந்தால், லாசரு மரிப்பதற்கு முன் அவனை சுகப்படுத்தியிருக்கலாம். முடிவில், தங்கள் சகோதரன் மரித்த பின் உயிரோடு ழுப்பப்பட்ட பின் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவு. அவர்கள் முடிவாகக் கண்டது உண்மையில் முடிவாக இருக்க வில்லை.

Application பயன்பாடு: இயேசு நக்கு செய்ய வேண்டும் என்று நான் நினைப்பவைகளை அவர் செய்யாமல் உதவாமல் இருக்கிறார் என்பது, அவர் என்னை நேசிக்க வில்லை என்பதைக் குறிக்காது. அவர் என் நன்மைக்காகவும் மகிமைக்காகவும் கிரியை செய்கிறார் என்று நான் அவரை நம்ப முடியும். நான் நிர்ணயித்த காலம் கடந்த் பின்னரும் கூட அவரால் கிரியை செய்ய முடியும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என்ன நேசிக்கிறீர் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு விசேசமானது. என் எல்லைகள் உம்மை மட்டுப்படுத்துவதில்லை. ஆமென்.

Scripture: John 11:3 So the sisters sent word to Jesus, "Lord, the one you love is sick."
4 When he heard this, Jesus said, "This sickness will not end in death. No, it is for God’s glory so that God’s Son may be glorified through it."
5 Jesus loved Martha and her sister and Lazarus.
6 Yet when he heard that Lazarus was sick, he stayed where he was two more days.

Observation: The sisters, Mary and Martha, recognize that Jesus loved Lazarus. Verse 5 says Jesus loved them too. Yet Jesus did not do what would be expected of someone who loved. Jesus did not just drop everything and come running. He even delayed his journey. The sisters were disappointed in Jesus timing. If only he had arrived sooner Jesus could have healed Lazarus before he died. In the end, they were clearly not disappointed as their brother was raised from the dead. What they saw as the end was not really the end!

Application: Just because Jesus does not help me when think He should, does not mean that He does not love me. I can trust Him that He is working for my good and His glory! He can even work after my deadline!

Prayer: Lord, how special to know you love me and you are not limited by my deadlines! Amen.


No comments:

Post a Comment