Wednesday, August 8, 2012

SOAP 4 Today - பின்பற்றும்படிக்கு அழைக்கப்பட்டவர்கள்

Scripture வேதவசனம்: யோவான் 10:2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
11. நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Observation கவனித்தல்: நல்ல மேய்ய்பன் ஆடுகளை மேய்ப்பதற்கு அழைத்துச் செல்லும்போது அவைகளின் பின் செல்லாமல், அவைகளுக்கு முன் சென்று வழிகாட்டுகிறான்.

Application பயன்பாடு: இயேசுவைப் பின்பற்றும்போது அவர் எனக்கு முன் செல்கிறார் என்ற நிச்சயம் எனக்கு உண்டு என்பதைக் கண்டுகொள்கிறேன். நான் வந்து சேருவதற்கு முன்பே அவர் அங்கே வந்து இருக்கிறார். நான் எதிர்கொள்வது என்ன என்பது அவருக்குத் தெரியும். நான் வந்து சேர்ந்து என்ன செய்கிறேன் என்பதை அவர் முன்னமே அறிந்திருக்கிறார். நான் அங்கே இருப்பதற்கான நோக்கத்தை அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் என்னை அங்கு வழி நடத்தினவர் அவரல்லவா!

Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்கு முன் ஓடிப் போகாமல் இருக்க எனக்கு நினைவுபடுத்தும். நீர் என்னை உம்மைப் பின்பற்றும்படிக்கே அழைத்திருக்கிறீர். ஆமென்.


Called to Follow

SOAP: Scripture, Observation, Application, Prayer

Scripture: John 10:2 The man who enters by the gate is the shepherd of his sheep.
3 The watchman opens the gate for him, and the sheep listen to his voice. He calls his own sheep by name and leads them out.
4 When he has brought out all his own, he goes on ahead of them, and his sheep follow him because they know his voice….
11 "I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.

Observation: The Good Shepherd does not go behind the sheep to drive them, but goes ahead of them to lead them.

Application: I am finding that following Jesus insures that He arrives first. He is already there when I arrive! He already knows what I will be facing. He already knows what I will be doing when I arrive. He knows the purpose for my being there because He is the one who led me there.

Prayer: Lord, gently remind me not to run on ahead. You have called me to follow. Amen.

No comments:

Post a Comment