Scripture வேதவசனம்: யோவான் 12:1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
Observation கவனித்தல்: அவர்கள் கொண்டாட காரணம் இருந்தது. இயேசு அவர்கள் வீட்டில் இருந்தார். இயேசு அவர்கள் நண்பராக இருந்தார். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பி இருந்தார்.
Application பயன்பாடு: இயேசு எப்பொழுதும் என் வீட்டில் வரவேற்கிறப்படுகிறார். அவருடைய பிரசன்னம் எப்பொழுதுமே கொண்டாடத்தகுந்தது. அவர் லாசருவுக்கு செய்ததைக் காட்டிலும் அதிகம் எனக்கு செய்திருக்கிறார். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பினார், ஆனால் எனக்காக அவரே மரித்தார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்கு செய்த எல்லாவற்றிற்கும் நான் எவ்விதம் நன்றி செலுத்துவேன். ஆமென். Lord, how can I say thanks for all you have done for me! Amen
No comments:
Post a Comment