Scripture வேதவசனம்: யோவான் 14:1 "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
Observation கவனித்தல்: என் இதயத்தைக் கலங்க விடக் கூடாது என இயேசு கூறுகிறார். ஆனால் நான் எப்படி இதைச் செய்ய முடியும்? என் சமாதானத்தைக் காத்துக் கொள்வது எப்படி? என் மனதை சமாதானத்துடன் காத்துக் கொள்வதற்கான திறவுகோலை இயேச்ய் தருகிறார். இதற்கு நான் தேவனை நம்பி, அவர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும். அவர் எங்கே போகிறார் என்றும், என்ன செய்யப் போகிறார் என்றும் சொல்கிறார். அவர் செய்து முடித்தபின் திரும்ப வந்து நம்மைச் சேர்த்துக் கொள்வதாக வாக்குப் பண்ணுகிறார்.
Application பயன்பாடு: சமாதானத்திற்கான திறவுகோல், நம்புகிற கட்டுப்பாடான மனம் என நான் காண்கிறேன். இவை எனக்கு முக்கியமானவை. நான் என் கண்களையும் காதுகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது ஆகும். அவர் சொன்னதை நினைவுபடுத்தி அதன்படி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.ஆமென்.
No comments:
Post a Comment