Scripture வேதவசனம்: யோவான் 16:32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
Observation கவனித்தல்: இயேசு தன் சீடர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். தன் கைது, விசாரணை, பாடுகள் மற்றும் மரணம் ஆகியவர் தன் சீடர்களை சிதறப்பண்ணும் என்று அவர் அறிந்திருந்தார். அவர் எல்லாராலும் கைவிடப்படுவார். மனிதக் கண்ணோட்டத்தில், அவர் தனியாக இருப்பார், ஆனால், நிஜத்தில், அவர் தனியாக இல்லை. அவரின் பிதா அவருடன் இருக்கிறார்.
Application பயன்பாடு: நான் தனியாக இருக்கும் நேரங்கள் உண்டு, ஆனால் நான் ஒருபோதும் தனிமையாக இருப்பதில்லை என்பத் உண்மை. தேவனால் அனுப்பப் பட்ட பரிசுத்த ஆவியானவர் என் தேற்றரவாளராக எப்பொழுதும் என்னுடன் கூட இருக்கிறார். நான் தனியாக இருப்பதைக் குறித்து பேசுவது, அல்லது நானே தனியாக காரியங்களைச் செய்வது தேவனுக்கு வருத்தத்தைக் கொடுக்குமா? நீங்கள் ஜெபிக்கும்போது தேவனும் அங்கே இருக்கிறார் என்பதை உணராமல், தனியே பேசிக் கொண்டு இருக்கிறீர்களா?
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னை விட்டு ஒரு போதும் விலகாதிரும். பரிசுத்த ஆவியானவரே நான் தனியாக இருப்பதைக் குறித்து முறுமுறுத்தாலோ, தனியாக செய்ய வேண்டியிருக்கிறதே என்று குறைபட்டாலோ எனக்கு உணர்த்தும் . ஆமென்.
No comments:
Post a Comment