Scripture வேதவசனம்:வெளிப்படுத்தல் 6: 9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.
10. அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
11. அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
Observation கவனித்தல்: இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலும், அவரின் தியாகமரணத்தின் மீதுள்ள விசுவாசத்தினாலும் மாத்திரமே நாம் பரலோகம் நுழைய முடியும். நாம் எவ்வளவு உண்மையாக கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறோம் என்று சிந்திப்பது தேவனிடத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. தேவன் அவரவர் உண்மைக்குத் தக்க பலனளிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். நற்செய்திக்காக தங்கள் உயிரையே தியாகமாகக் கொடுத்தவர்களுக்கு தேவன் சிறப்பான இடத்தைக் கொடுக்கிறதை நாம் இவ்வேதபகுதியில் காண்கிறோம்.
Application பயன்பாடு: என் வாழ்க்கை எங்கே போய் முடியும் என்பதை நான் அறியேன், ஆனால் நான் எல்லா சூழ்நிலைகளிலும் அவரைக் கனப்படுத்த உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். வாழ்விலும் அல்லது மரணத்திலும் அவரைக் கனப்படுத்த விரும்புவது என்பது எனக்கு எதிர்கால பலன்களைத் தருவதாகவும், அவருக்கான நிகழ்கால மகிமையாகவும் இருக்கிறது. தேவன் மேல் சிறந்த விசுவாசத்தையும், தேவனின் உண்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதில் வளர்ச்சியையும் பெற்ற பல மூத்த குடிமக்களைக் காணும் பாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னைக் காணும்போது, என் மூலமாக நீர் உம் அன்பையும், உண்மையையும் காண விரும்புகிறேன்.ஆமென்.
No comments:
Post a Comment