Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 10:5 சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;
6. இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
7. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
Observation கவனித்தல்: நான் வார இறுதி நாட்களை குடும்பத்துடன் செலவழிப்பதில் மிகவும் மகிழ்கிறேன். திங்கள்கிழமை ஆனதும் நான் மறுபடியும் என் வேலைக்கு ஆயத்தமாகிவிடுகிறேன். சில வருடங்களுக்கு முன் என் தகப்பனார் மரித்த போது, என் பெற்றோர்களின் காலம் முடிந்து விட்டது என்பதை நான் உணர்ந்த நேரமாக அது இருந்தது. காரியங்கள் முக்கியமான தருணங்கள் வாழ்க்கையில் உண்டு. நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு இனிக் காத்திருக்கத் தேவை இல்லை. இது எப்படி ஆகும் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நாம் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் தான் வாழ்கிறோம். இங்கே எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது.
Application பயன்பாடு: அனேகர் தேவனால் வாக்குப்பண்ணப்பட்ட நியாயத்தீர்ப்பைக் குறித்து எண்ணுகிறதில்லை. நான் அந்தத தவறைச் செய்யக் கூடாது. என்னால் அதை தடுத்து நிறுத்தவோ, மாற்றவோ முடியாது. ஆனால் அது என்னை பாதிக்கும் விதத்தை என்னால் மாற்ற முடியும். வரப்போகிற நியாயத்தீர்ப்பில், நான் என் சிருஷ்டிகரின் இரக்கமுள்ள பராமரிப்பில் என்னை வைத்து விட முடியும். என் பாவங்களை மூடும்படிக்குச் செலுத்தப்பட்ட கிரயத்தை நான் ஏற்றுக் கொள்ளமுடியும். அது நடந்த உடன்; நான் அவர் முன் நிற்பேன். எதிர்பார்ப்பு காலம் முடிந்துவிடும், அதன் பின்னர் நடப்பது உண்மையானதாக இருக்கும். இனி காலம் செல்லாது. ;
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி பாரத்தை நீர் கிருபையாகச் சுமந்ததற்காக உமக்கு நன்றி. உம் வருகைக்கான காலம் மிகவும் சமீபம். நான் ஆயத்தமாக இருக்க விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment