Thursday, September 6, 2012

SOAP 4 Today - நம்மை ஆயத்தப்படுத்தும் தேவன்

Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 12:6 6. ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.

Observation கவனித்தல்: இந்த ஸ்திரீ யாரைக் குறிக்கிறாள் என்பதைக் குறித்து வேத பண்டிதர்கள் முரண்படுகின்றனர். ஆனால் ஒன்று நிச்சயம், அவள் யார் என்பதை தேவன் அறிவார், அவளுக்கு அவர் ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணி இருக்கிறார். தேவனால் ஒரு இடம் ஆயத்தப் பண்ணப்பட்டால், அவளுக்கு என்ன தேவை என்பதும் அவருக்குத் தெரியும். அவளுடைய பாதுகாப்பு மற்றும் சுக வாழ்வுக்காக தேவன் திட்டமிடுகிறார். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை முழு வேதாகமத்திலும் தேவன் தம் ஜனங்களுக்காக ஆயத்தம் பண்ணுவதைக் காணலாம். இயேசு தம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு முன்பு, தன் பிதாவின் வீட்டில் அவர்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போவதாகச் சொன்னார்.

Application பயன்பாடு: தேவன் என்னை அறிந்திருக்கிறார், என் தேவையையும் அறிந்திருக்கிறார். வருங்காலத்திற்குப் போதுமான மற்றும் தேவையான ஆயத்தத்தை அவர் செய்திருக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீ உண்மையுள்ளவரும் நம்பத்தக்கவருமாக இருக்கிறீர். என் எதிர்காலத் தேவைகளுக்கு நீர் எனக்கு ஆயத்தம் பண்ணுகிறவைகள் போதுமானதாக இருக்கும் என்று நான் உம்மை நம்ப முடியும். ஆமென்.

No comments:

Post a Comment