Scripture வேத வசனம் : ரோமர் 15:17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக் குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.
18. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை;
19. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.

Observation கவனித்தல்: தேவ இராஜ்ஜியத்தின் சத்தியத்தைக் கூறி அறிவித்தபோது, இயேசு அந்த ராஜ்ஜியத்தின் வல்லமையை வெளிப்படுத்திக் காட்டினார். சீடர்கள் அதைத் தொடர்ந்து செய்தன்ர். இங்கே பவுலும் அதே போல செய்கிறார். இயேசுகிறிஸ்துவின் அற்புதங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் செய்யப்பட்டன. பவுலின் வாழ்க்கையிலும் அதேபோல நடந்தது என இங்கு காண்கிறோம்.
Application பயன்பாடு : பரிசுத்த ஆவியில் கிரியையால் இயேசு மற்றும் பவுலின் ஊழியமும் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது. அப்படியானால் நான் என் ஊழியத்திலும் வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவியானவ்ரை எவ்வளவு அதிகமாக சார்ந்து கொள்ள வேண்டும். அவ்ர் என்னிடமும் என் மூலமாகவும் பேச வேண்டும்.
Prayerஜெபம்: பரிசுத்த ஆவியானவரே உம் சத்தத்தைக் கேட்குமளவும் எனக்குள் கிரியை செய்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment