பிப்ரவரி 1: யாத்திராகமம் 30-32; அப்போஸ்தலர் 8
Scripture வேதவசனம்: யாத்திராகமம் 31:6 ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
Observation கவனித்தல்: இந்த வசனம் மோசேயிடம் தேவனிடம் பேசிய வசனம் ஆகும். வனாந்திரத்தில் 40 வருடங்கள் எடுத்துச் செல்லக் கூடிய ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை தேவன் மோசேயிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். மோசேயிடம் தேவன் திட்டங்களைக் கொடுத்தார். பெசலேயேல் மற்றும் அகோலியாப் போன்றவர்களுக்கு தேவன் ஞானத்தைக் கொடுத்தார். தேவன் திட்டங்களை சித்திர வேலை செய்பவர்களுக்கோ அல்லது மோசேக்கு ஞானத்தையோ கொடுக்கவில்லை. தேவ சித்தத்தைச் செய்து முடிப்பதற்கு அவர்கள் இணைந்து செயல்பட வேண்டியதாயிருந்தது.
Application பயன்பாடு: தேவனுடைய சித்தத்தை நான் தனியாக செய்து முடிக்க முடியாது என்று நான் அறிந்திருக்கிறேன். நான் தனியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, தேவனுடைய சித்தத்துக்கு தடையாகவே இருக்கிறேன். நான் சுயாதீனமாக செயல்படுவது முக்கியமானது ஆகும். ஏனெனில் அதுவே தேவன் மீது கொண்டிருக்கும் அன்பை (அல்லது அன்புக் குறைவை) நிரூபிக்கிறதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், மற்றவர்களைச் சார்ந்திராமல் வாழ என் சுதந்திரத்தைப் பயன்படுத்துவது என்பது கிறிஸ்துவின் சரீரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது. நாமாக முன்வந்து மற்றவர்களுடன் தொடர்புகொடு வேலைசெய்யும்போது அல்லது செயல்படும்போது மட்டுமே நாம் ஒருவருக்கொருவன் அன்பில் கீழ்ப்படிந்து தேவனுடைய பரிபூரணச் சித்தத்தைச் செய்து முடிக்க முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை நேசிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறேன். உம் மகிமைக்காகவும் என் நன்மைக்காகவும் நீர் எனக்கு தந்திருக்கும் வரங்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன். உம் சித்தத்தைச் செய்து முடிப்பதற்காக நான் செய்து முடிப்பதற்காக அவர்களுடன் இணைந்து செயல்பட எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment