Tuesday, January 8, 2013

SOAP 4 Today - நிகழ்காலம் Vs எதிர்காலம்

 
Scripture வேதவசனம்:   லூக்கா 9:25  மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.

Observation கவனித்தல்:  முதிர்ச்சி அடைந்ததற்கான ஒரு அடையாளம் என்னவெனில் வருங்காலத்தில் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுவதற்காக நிகழ்காலத்தில் இருக்கும் மகிழ்ச்சியை இழக்கக் கொடுப்பது என நான் கேட்டிருக்கிறேன்.   Nate Saint என்பவர் இப்படிச் சொல்கிறார், “  இழக்கமுடியாத ஒன்றைப் பெறுவதற்காக தன்னிடத்தில் வைத்துக் கொள்ள முடியாததை விட்டுவிடுகிறவன் முட்டாள் அல்ல”
 
Application பயன்பாடு:   எனக்குத் தகுதியற்ற  காரியங்களைப் பெறுவதற்காக என் நேரத்தையும், என்னிடம் இருப்பவைகளையும் செலவிடுவது என்பது முட்டாள்தனமானது ஆகும்.  பரலோகத்தில் நான் சந்திக்கப் போகிறவர்களுக்காக உதவிட என் நேரத்தையும் என் உடைமைகளையும் செலவிடுவது - ஞானம்.  
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நித்தியத்தை மனதில் கொண்டு நான் இன்று வாழ எனக்கு உதவும்.





No comments:

Post a Comment