Tuesday, February 12, 2013

பார்வைத்திறன் 20/20

Scripture வேதவசனம்:   அப்போஸ்தலர் 20:20 பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி

Observation கவனித்தல்:  கண்மருத்துவத் துறையில், 20/20 அளவு பார்வைத்திறன் கொண்டவர்களை பரிபூரணமான பார்வைத்திறன் கொண்டவர்கள் என்று சொல்லுகிறோம். இங்கே அப்போஸ்தலர்.20;20ல் பவுல் எபேசுவில் உள்ள சபை மூப்பர்களிடம் பேசுகிறார்.  சபைக்கான 20/20 பார்வைத் திறன் அல்லது தரிசனம் இதுதான் என இவ்வசனத்தைக் குறிப்பிட்டு பிரசங்கம் செய்யப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். பொது கூட்டங்களிலும் வீடுகள்தோறும் இது காணப்படவேண்டும்.
 
Application பயன்பாடு:   பொதுவாகவும், கிரமமாகவும் கூடிவரும் விசுவாசிகளின் சபையில் ஒரு அங்கமாக இருப்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான பகுதி ஆகும்.  அதே  வேளையில் வீட்டில் நான் எப்படி வாழ்கிறேன் என்பதும் முக்கியமானது ஆகும்.  நான் வாராந்திர கூடுகைகளுக்கு வருகிறேனா என்பதைக் குறித்து என் சபை கரிசனையுடன் இருக்கும்.  அவர்கள் வீட்டில் நான் எவ்வாறு பேசுகிறேன் என்பதைக் குறித்தும் அக்கறையுடன் இருக்கவேண்டும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  ஞாயிறு சபை கூடுகையில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன்.  ஆராதனையிலும், பிரசங்கத்திலும் உம் பிரசன்னத்தை உணர்ந்தேன். வீட்டில் உம்முடைய வசனத்தை தியானிக்கையிலும் நான் உம் பிரசன்னத்தை உணரும்படி நீர் செய்கிற படியால் உமக்கு நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment