Monday, February 11, 2013

தேவன் நல்லவர்

பிப்ரவரி 12: லேவியராகமம் 18-19; சங்கீதம் 13; அப்போஸ்தலர் 19
 
Scripture வேதவசனம்:  சங்கீதம் 13:5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
6. கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
 
Observation கவனித்தல்:  ஆறுவசனங்களை மட்டுமே கொண்ட இந்த சங்கீதத்தின் துவக்கத்தில்,  தாவீது தான் கடந்து செல்கிற பிரச்சனையைக் குறித்து புலம்புகிறார். ஆனால் கடைசி இருவசனக்களில் தேவனின் இரட்சிப்பின் களிகூறுகிறார்.  தன் வாழ்க்கையை முழுவதுமாகப் பார்க்கையில் கர்த்தர் நல்லவராகவே இருந்திருக்கிறார் என்பதை அறிந்து அவர் ஆண்டவரின் புகழைப் பாடுகிறார்.           
 
Application பயன்பாடு: நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், நான் தாவீதின் கருத்துக்கு உடன்படுகிறேன். எனக்கு அனேக கடினமான தருணங்கள் வந்தன, ஆனால் அவ்வேளைகளில் எல்லாம் தேவன் எனக்கு நல்லவராகவே இருந்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, வாழ்க்கை எப்பொழுதும் நல்லதாகவே இருப்பதில்லை. ஆனால் நீர் எப்பொழுதும் நல்லவராகவே இருக்கிறீர்.  நிச்சயமாகவே நீர் எனக்கு நல்லவராகவே இருக்கிறீர். ஆமென்.

No comments:

Post a Comment