Scripture வேதவசனம்:
1தெசலோனிக்கேயர் 3:5 ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப்
போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று,
உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
Observation கவனித்தல்: தெசலோனிக்கேயில் உள்ள மக்கள் மீது பவுல் கொண்டிருந்த அன்பை நான் இவ்வார்த்தைகளில் காண முடியும். இங்கும், இந்த அதிகாரத்தின் முதல் வசனத்திலும், ”நாங்கள் இனி பொறுத்திருக்கக் கூடாமல்” என்று பவுல் எழுதுகிறார். அவர் அவர்களை நேசித்தார், மேலும் அவர்கள் விசுவாசத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். ஆகவே அவர் அதற்காக தீமோத்தேயுவை அனுப்பினார்.
Application பயன்பாடு: அன்பை பல விதங்களில் காண்பிக்கமுடியும். ஆனால் ஏதோ ஒன்று தவறாக இருக்கக் கூடும் என்ற கரிசனை இருக்கும் போதுதான் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. எந்த செய்தியுமே நல்ல செய்தி அல்ல என்று சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். வேறுவிதமாகக் கூறுவதானால், ஏதேனும் வித்தியாசமானதாக இருக்குமென்றால் நாம் அவைகளைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கவலையுடன் இருப்பவர்களை எந்த செய்தியும் திருப்திப்படுத்தாது. நான் நேசிக்கிறவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நீர் என்வாழ்க்கையில் வைத்திருக்கிறவர்களில் யாரையாகிலும் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை இருக்கும்போது எனக்கு நினைவுபடுத்தும். நான் தொடர்பில் உண்மையுடன் இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment