Tuesday, May 7, 2013

அவருடைய மகிழ்ச்சி

Scripture வேதவசனம்:  மத்தேயு 24:45   ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது அப்படிச்செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Observation கவனித்தல்: நான் இயேசுவை ஆண்டவரே என்று கூப்பிடும்போது அல்லது குறிப்பிடும்போதெல்லாம், நான் அவருடைய சேவகன் என்று கூறுகிறேன். அவருடைய பணிவிடைக்காரனாக இருப்பது என்பது பொறுப்புகளும் அதேவேளையில் தகுந்த பலன்களும் கொண்டதும் ஆகும்.
 
Application பயன்பாடு: இயேசுவை என் ஆண்டவர் என்று நான் அழைத்தபடியால், அவருடைய பணிவிடைக்காரனாக என் பொறுப்புகளை நிறைவேற்றுவது முக்கியமானது ஆகும். ஊழியக்காரனுக்குக் கொடுக்கப்படும் பொறுப்புகள், அவனுடைய மகிழ்ச்சிக்காக அல்லாது அவனுடைய எஜமானுடைய மகிழ்ச்சிக்காகவே கொடுக்கப்படுகிறது. 

Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம் ஊழியக்காரனாக, நான் உமக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறவனாக இருக்க உதவும். இன்று நான் உமக்கு மகிழ்ச்சியைத் தர என்ன செய்ய வேண்டும்? ஆமென்.

No comments:

Post a Comment