Saturday, May 18, 2013

விருப்பத்தேர்வுகள்

Scripture வேதவசனம்:   1ராஜாக்கள் 3:5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
Observation கவனித்தல்:   இந்த  வேதபகுதி அலாவுதீனின் அற்புத விளக்கைப் பற்றி நான் கேள்விப்பட்ட கற்பனைக் கதையை எனக்கு நினைவுபடுத்துகிறதுஅந்த அற்புத விளக்கை தேய்த்தால் ஒரு பூதம் வந்து தேய்த்தவரின் மூன்று ஆசைகளை நிறைவேற்றும். அந்தக் கதையில் திருப்பமாக மூன்றாவது ஆசையானது முதல் இரண்டு ஆசைகளின் படி பெற்றதை அழித்துவிடும். ஆகவே அவர் கையில் எதுவும் மிஞ்சாது. சாலமோன் மூன்று ஆசைகளைக் கேட்கவில்லை, ஒன்றையே கேட்டார். ஆனால் அவனிடம் கேட்டது ஒரு பூதமல்ல, சர்வ வல்லமையுள்ள தேவன் ஆவார்சாலமோன் முதல் முறையிலேயே சரியாக கேட்க வேண்டி இருந்தது. அவர் அதைச் செய்தார். இஸ்ரவேலரை நன்றாக ஆளுகை செய்யும்படி அவர் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்டார். நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை அறியும்படி கேட்டார்.
அவர் தேவனிடம் கேட்டவைகளில் சிறந்தது என்னவெனில், தேவனுக்கும் மக்களுக்கும் நல்ல ஊழியராக இருக்க வேண்டும் என்பதாகும்சாலமோன் சுய நலத்துடன் எதையும் கேட்கவில்லை. அவன் தனக்காகக் கேட்காமல் மற்றவர்களுக்காகக் கேட்டான்.   (சாலொமோனின் விருப்பத்தைக் கேட்டு தேவன் எவ்வளவு மகிழ்ந்தார் என்பதைப் பார்க்க, வாசிக்க 1இராஜாக்கள் 3:10-14!)

Application பயன்பாடுஅவ்வப்போது நானும்  கூட சில எதிர்பாராதவைகளைப் பெறுகிறேன். அதிகப்படியான பணம் கிடைக்கிறது. அதை நான் எவ்வாறு செலவழிக்க வேண்டும்? ஒரு நாளில் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும்
Prayer ஜெபம்:  கர்த்தாவே, சாலமோனின் விருப்பத்தில் நீர் பிரியமாக இருந்தது போல என் ஆசைகளும் உமக்கு பிரியமானதாக இருக்க உதவும். ஆமென்.

No comments:

Post a Comment