Sunday, May 19, 2013

மதிப்பு சேர்த்தல்

Scripture வேதவசனம்:   2 தெசலோனிக்கேயர் 3:10   ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
11. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
12. இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
13. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

Observation கவனித்தல்:  வேலை செய்ய திராணி உள்ளவன், ஆனால் வேலை செய்ய மனதில்லாதவன் உணவு உண்ணவும் விரும்புகிறார். அப்படிப்பட்டவனுக்கு உணவளிக்கக் கூடாது என பவுல் சொல்கிறார். அவன் தேவனுடைய வார்த்தையின் படி வாழவில்லை.  ஒருவர் வேலை செய்யாமல் இருக்கிறார் என்பதினால் அவர் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்று ஆகிவிடாது.  தேவை இல்லாத செயல்களைச் செய்வதில் அவர் தன் சக்தியை வீணடிக்கலாம்.  அவருடைய செயல்கள் அவருக்கோ மற்றவருக்கோ எந்த பயனையும் கொடுப்பதில்லை.
 
Application பயன்பாடு: இப்போது நான் செய்து கொண்டிருக்கிற பயனுள்ள செயலை, நான் சோர்ந்து போய் விட்டுவிடக் கூடாது என ஆண்டவர் சொல்கிறதை நான் கேட்கிறேன்.  என் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் பயனுள்ளவைகளைச் செய்கிற காரியங்களை நான் தொடர்ந்து செய்ய வேண்டும். என் இளைப்பாறுதலும் நினைவுகளும் இயேசுவை நோக்கியதாக இருக்க வேண்டும்.  நான் ஆராதிக்கிறவராக இருக்க வேண்டும். ஏனெனில் தேவன் ஆராதிக்கிறவர்களைத் தேடுகிறார்.
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  உம்முடைய பிரசன்னத்தைக் காட்டிலும் வேறெதுவும் எனக்கு அதிக புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. ஆமென்.

No comments:

Post a Comment