Tuesday, May 21, 2013

ஆரவார ஆர்ப்பரிப்பு

Scripture வேதவசனம்: சங்கீதம் 98:4   பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
5. சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
6. கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
7. சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
8. கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
9. அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

Observation கவனித்தல்: தேவனுக்கு ஆரவாரமான துதியைச் செலுத்துவதில் நாம் இயற்கையுடன் இணந்து கொள்ளுமாறு நாம் இந்த சங்கீதத்தில் உற்சாகப்படுத்தப்படுகிறேன். இது அமைதியான துதி அல்ல, மாறாக ஆரவாரமான துதி.  இது நீர்வீழ்ச்சியின் அருகில் நின்று அல்லது கடற்கரையில் பெரும் அலைகளின் இரைச்சலில் அருகில் நிற்பவர் பேசுவதைக் கேட்க முடியாத நிலையில் இருப்பதைப் போன்றதாகும். அருகில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் மக்களிடம் இருந்து இந்த துதியானது வருகிறது. இத்துதி முழுமையும் அவருக்கேயானது.
 
Application பயன்பாடு:  அருகில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் சபித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை நான் அனேகமுறை பார்த்திருக்கிறேன்.  இயேசுவைக் குறித்து நான் எவ்வளவதிகமாகப் பேசி அவருக்கு நான் துதி செலுத்த வேண்டும். இயேசுவைப் பற்றிப் பேசும்போது நான் என் குரலை தாழ்த்தக் கூடாது.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  என் உரையாடலைக் கேட்கும் அருகில் இருப்பவர்கள் நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பையும் அன்பையும் கண்டுகொள்ளச் செய்யும். ஆமென்.
 

No comments:

Post a Comment