Monday, May 6, 2013

மன்னிப்பு தேவைப்படுகிறது

Scripture வேதவசனம்:   சங்கீதம் 51:16  பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

Observation கவனித்தல்:  தாவீது பாவம் செய்து குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். தேவனுடனான உறவு புதுப்பிக்கப்பட அவர் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். அவர் பலியை செலுத்தி இருப்பார். ஆனால் தேவன் பலியில் ஒரே ஒரு பலியில் மட்டுமே பிரியமாயிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார்.  ஒரு மிருகத்தை பலியிடுவதல்ல, நொறுங்குண்ட உடைந்த இருதயமே  அந்த பலி ஆகும்.  தான் பாவம் செய்து ஆண்டவரை வேதனைப் படுத்தியதைக் குறித்து அவர் மிகவும் வருத்தப்பட்டார்.  
 
Application பயன்பாடு: தாவீதைப் போல, நானும் என் பாவங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. நான் உம் சிலுவை மரணத்தைப் பற்றிய அறிவில் வளரும்போது,  என் பாவம் எப்படி உம்மை வேதனைப்படுத்துகிறது என்பதை அறிகிறேன். இருதயத்தில் உணர்ந்து பாரத்துடம் செய்யப்படும் பாவ அறிக்கை அவர் கிர்பையால் சந்திக்கப்படும் என்பதை அறிந்திருக்கிறேன்.  எனக்கு தகுதியில்லாததை நான் பெற்றுக் கொள்வேன். 

Prayer ஜெபம்:  கர்த்தாவே, என்னை மன்னித்து சுத்திகரிக்க நீர் கொண்டிருக்கும் விருப்பத்திற்காக நன்றி. சிலுவையில் நீர் அதற்கான விலையைக் கொடுத்தீர். ஆமென்.

No comments:

Post a Comment