Sunday, December 15, 2013

விசுவாசிப்பதற்கு கடினமானதாக்குதல்

Scripture வேதவசனம்:   1 பேதுரு  2:12  புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 பேதுரு 3:16  கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.

Observation கவனித்தல்: மற்றவர்கள் குற்றம் சாட்டும்படியாக நாம் இருப்பது தேவனுடைய சித்தமல்ல. நாம் அதற்கப்பாற்ப்பட்டவர்களாக விளங்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் மன்னிப்பதன் மூலமாக அவர்களுக்குப் பதிலுக்குப் பதில் செய்வதக் காட்டிலும் மேலான நிலையை அடைய வேண்டும் என அவர் விரும்புகிறார். மேலும் சொல்லப்பட்டவைகளை மற்றவர்கள் நம்புவதற்கு மிகவும் கடினமானதாக்கும் விதத்தில் நாம் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
 
Application பயன்பாடு:  என்னை யாராகிலும் குற்றப்படுத்திப் பேசும்போது, மற்றவர்கள் அதை நம்புவதற்கு ஏது இல்லாத ஒரு சூழ்நிலையை உண்டாக்கக் கூடிய அளவுக்கு வாழவேண்டும் என்பதே என் இலட்சியமாக இருக்கவேண்டும். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, மேற்கண்ட வசனங்களுக்கு நீரே சிறந்த உதாரணம். நான் உம்மைப் போல மாற விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment