Scripture வேதவசனம்: தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது
இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய
புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,
7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,
7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
Observation கவனித்தல்: அநித்தியமான தேவன் உதாரத்துவமாக கொடுக்கிறார். பவாங்களை அவரிடம் அறிக்கையிடுபவர்கள் அவருடைய கிருபையை அளவிலாது பெற்றுக் கொள்கின்றனர். அவர் நம் வாழ்க்கையில் வாழ வரும்போது, மற்றவர்களுக்கும் கொடுக்கத்தக்கதாக சம்பூரணமாக அவர் தம் பிரசன்னத்தை தருகிறார்.
Application பயன்பாடு: எனது நேரமும் பொருட்களும் எல்லைக்குட்பட்டது. ஆகவே நான் எல்லா தேவைக்கும் சரியாக பதில் சொல்ல முடியாது. யாருக்கு உதவ வேண்டும் என்பதை நான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் தேவன் எனக்கு ஆசீர்வாதங்களை தடுத்து வைத்து, அதினால் நான் மற்றவர்களுக்கு உதவ முடியாமல் போனதாக ஒருபோதும் நான் காணவில்லை. ஆசீர்வதிக்கப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாய் இருக்கும்படி இந்த சத்தியம் நம்மை மாற்றுகிறது. என்னால் மற்றவர்களுக்கு உதவ முடியாமல் போகும்போது, நான் அவர்களை அள்ள அள்ள குறையாமல் தரும் தேவனுக்கு நேராக மகிழ்வுடன் வழி நடத்துகிறேன். என்னுடைய இயலாமை தேவனால் உதவ முடியாது என்பதைக் குறிக்க முடியாது.
Prayer ஜெபம்: பரம பிதாவே, நீர் அநித்தியமானவர். நீர் உதாரத்துவமாக கொடுக்கிறீர். நீர் உம் பரிசுத்த ஆவியானவரை எனக்கு சம்பூரணமாக கொடுத்ததற்காக நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment