Saturday, December 21, 2013

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

Scripture வேதவசனம்: யோவான் 10:37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

Observation கவனித்தல்: மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று சொன்னவர் (மத்தேயு.5:16), இங்கே அவருடைய கிரியைகளைப் பார்க்கும்படி மக்களிடம் சொல்கிறார். ஒருவரின் செயல்களே அவருடைய  தன்மையின் நிரூபணமாக இருக்கிறது. அவருடைய கிரியைகளில் நாம் நிரூபணத்தைக் காண முடியாவிடில், அவரை விசுவாசிக்கவும் வேண்டியதில்லை என்று இயேசு சொன்னார். இயேசுவில் இருந்த பிதாவின் பிரசன்னத்தைப் பற்றிய நிரூபணம் அவருடைய கிரியைகளில் எளிதில் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.
 
Application பயன்பாடு:  என் செயல்களில் இயேசு எனக்குள் இருக்கிறார் என்பதற்கான நிரூபணம் இருக்கிறது. நான் என்ன பேசுகிறேன் என்பதும், என்ன செய்கிறேன் என்பதும் யார் என்னை கட்டுப்படுத்துகிறார் என்பதற்கான வெளியரங்கமான செயல்களாக இருக்கின்றது. நான் எந்தளவுக்கு அதிகமாக இயேசு என் உணர்வுகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறேனோ அவ்வளவதிகமாக அவர் என்னில் வெளிப்படுவார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்குள் உம்முடைய ஆட்சி பூரணமாக இருக்கும்படியாகவும், அதை மற்றவர்கள் எளிதில் கண்டுகொள்ளத்தக்கதாக நான் வாழ எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment