Wednesday, January 1, 2014

உண்மையுள்ளவர்

Scripture வேதவசனம்:   ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

Observation:    தேவனைப் பற்றி எதுவும் அறியாத ஒருவர் வேதாகமத்தை வாசிப்பதற்காக எடுக்கக் கூடும். அவர் முதல் பக்கத்திலேயே தேவன் இருக்கிறார் என்பதைக் கண்டுகொள்வார். 
இரண்டாவதாக அவர் சிருஷ்டிகர் என்பதைக் அறிந்துகொள்வார். வாசிப்பவர் தேவனுடைய தன்மை மற்றும் அன்பு பற்றி எதையும் வாசிக்காவிடினும், தேவன் இருக்கிறார் என்பதையும் அவரே சிருச்ஜ்டிகள் என்பதையும் அறிந்துகொள்வார். 
மூன்றாவதாக, தேவன் பேசுகிறவர் என்பதை அறிந்து கொள்வார். இதுவே முழுவேதாகமத்திலும் காணப்படுகிற தேவனுடைய முக்கியமான தன்மை ஆகும். வேதாகமத்தில் மட்டுமல்ல, பல புத்தகங்களில் அவருடைய வார்த்தைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. தேவன் பேசுகிறார், தொடர்பு கொள்கிறார்.
 
Application பயன்பாடு: கடந்த நாட்களில் தேவன் நம்மோடு பலவிதங்களில் பேசி இருக்கிறார். நான் அனுதினமும் வேதத்தை வாசித்து அவர் என்னுடன் பேசுவதற்கு நான் தடையாக இராதபடி இருக்கிறேன்.எல்லா நாட்களிலும் தேவன் பேசுவதை நான் உணர்கிறேன். அவர் பேசுவதற்கு உண்மை யுள்ளவராக இருக்கிறார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் விசுவாசத்தின்படியே நீர் என்னுடன் பேசுவதற்கு உண்மை உள்ளவராக இருக்கிறீர். இப்பொழுது உம் வார்த்தையின்படியே என் விசுவாசம் அதிகரிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆமென்.

No comments:

Post a Comment