Scripture வேதவசனம்: லூக்கா 3:1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து
யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு
அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய
இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா
காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
Observation கவனித்தல்: இந்த வசனங்களில் வரும் பெயர்கள் இந்த சம்பவங்கள் எப்பொழுது நடந்தன என்பதைக் கண்டுகொள்வதற்கு வேத பண்டிதர்களுக்கு உதவுகின்றன. அவை நாட்காட்டிக் குறிப்புகளாக விளங்குகின்றன. ஆனால் தேவனுடைய வார்த்தையானது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இவர்களுக்கு உண்டாகாமல், வனாந்திரத்தில் வசித்து வந்த ஒரு எளிய மனிதனுக்கே உண்டாயிற்று. அச்சமயத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவம் அரண்மனையில் அல்ல, வனாந்திரத்தில் உண்டாயிற்று. வனாந்திரத்தில் இருந்த ஒரு மனிதனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வந்தது.
Application பயன்பாடு: என் வாழ்வில் நடக்கும் முக்கியமான காரியம் என்னவெனில் தேவன் என்னுடன் அனுதினமும் பேசுவது ஆகும். என்னைப் பொறுத்தவரையில், அதைவிட முக்கியமானது ஆகும். அவரிடம் இருந்து கேட்பது பற்றி எனக்கு போதிக்கிறார்.
Prayer ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னுடன் பேசுவது என்பது எவ்வளவு ஆச்சரியமானது! ஆமென்
No comments:
Post a Comment