Tuesday, January 14, 2014

மக்களை கவனிப்பவர்

Scripture வேதவசனம்: லூக்கா 14:1. ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2. அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்...
7  விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:

Observation கவனித்தல்:  இரண்டாவது வசனத்தில், ஜனங்கள் இயேசுவைக் கவனமாக கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம்.  பின்பு அவர் அச்சூழ்நிலைக்கேற்ற ஒரு உவமையைச் சொன்னார்.
 
Application பயன்பாடு: இயேசுவைப் பின்பற்றுபவராக, மற்றவர்கள் என் வாழ்க்கையைக் கவனித்துப் பார்க்கும்போது நான் ஆச்சரியமடையக் கூடாது. நான் பார்க்கப்படக் கூடிய இடத்தில் தேவன் என்னை வைத்திருக்கிறார். மற்றவர்கள் என் வாழ்க்கையைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மேலும் மற்றவர்கள் பார்க்கக் கூடிய இடத்தில் நான் இருக்கிறேன், நானும் என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களைக் காண முடியும். இயேசுவைப் போல, நான் மக்களைக் கவனிக்கிறவர்களாக இருக்க முடியும். அதன் பின் நான் சொல்லும் செய்தி அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
 
Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுற்றிலும் நடப்பவைகளைக் கவனிக்கவும், பின்பு சரியான வார்த்தைகளைப் பேசவும் என்னை வழிநடத்தும்.ஆமென்.

No comments:

Post a Comment