Wednesday, January 8, 2014

தேவன் அறிந்திருக்கிறார்

Scripture வேதவசனம்: ஆதியாகமம் 21:16 பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

Observation கவனித்தல்: ஆகாரால் பிள்ளையைக் கவனித்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆனால் தேவனால் அது முடியும், அவர் அதைச் செய்தார். அச்சூழ்நிலை அவளுடைய கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது, ஆனால் தேவனுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 16ம் வசனத்தில் ஆகார் அழத்துவங்கினாள் என வாசிக்கிறோம். ஆனால் அடுத்த வசனத்தில் தேவன் பிள்ளையின் அழுகையைக் கண்டதாக வாசிக்கிறோம். தேவன் ஆகாரின் அழுகையைக் காணாமல் பிள்ளையின் அழுகையைக் கண்டார் என்பது இதன் பொருளல்ல. ஆகாரின் மனதை அழுத்திய வேதனையை தேவனும் கண்டார்.
 
Application பயன்பாடு: தேவன் என் கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்ளும்போது என் சுமை மிகவும் இலகுவாகிறது.  பிரச்சனையைக் குறித்து நான் அவருக்கு சொல்ல வேண்டியதே இல்லை.  என்ன நடக்கிறது என்பதை அறிய அவர் நம் ஜெபத்திற்காக காத்துக் கொண்டிருக்க வில்லை. ஆயினும், நான் யுத்தத்திலும் வெற்றியிலும் ஒரு பங்கு வகிக்கும்படி அவர் என் ஜெபங்களுக்குக் காத்திருக்கும் தருணங்களும் இருக்கின்றன.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னைக் கவலைப்படுத்துகிற காரியங்களை நீர் முன்னமே அறிந்திருக்கிறீர் என்பதற்காக மகிழ்கிறேன். என்னை விட அதிகமாக நீர் என் தேவைகளை புரிந்து கொள்கிறீர்.நான் உம்மை நம்ப முடியும். ஆமென்.

No comments:

Post a Comment