Scripture வேதவசனம்: சங்கீதம் 5:9 அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை
திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
10. தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படிசெய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
11. உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

Observation கவனித்தல்: இருவேறு எண்ணங்களின் முரண்பாட்டைக் கூறுவது எபிரேய பாடல்களின் ஒரு தன்மை ஆகும். இங்கே தீமையான இருதயத்தை உடையவர்கள் மற்றும் கர்த்தரை நம்புகிற இருதயத்தார்களினிடையே உள்ள வித்தியாசத்தைக் காண்கிறோம். ஒருவரின் வாய் பொய்யினால் நிறைந்திருக்கிறது. மற்றவரின் வாயோ மகிழ்ச்சியானால் நிறைந்திருக்கிறது. ஒருவர் வீழ்ச்சிக்கு நேராகவும் அடுத்தவர் சர்வ வல்லமையுள்ள தேவனின் பாதுகாப்பிலும் இருக்கிறார். ஒருவர் கலகம் பணுகிறவராகவும், அடுத்தவரோ தேவனுடைய அன்பில் நடக்கிறவராகவும் இருக்கிறார். எவ்வளவு வித்தியாசம்!
Application பயன்பாடு: தேவனைச் சேவிப்பதில் பயனுண்டா?
சங்கீதக்காரன் உண்டு என்று எண்ணுகிறார், நானும் கூட. மற்றவர்கள் என்னைக் காணும்போது, அவர்களும் அப்படியே நினைப்பார்கள்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் இருதயம் எப்பொழுதும் மகிழ்ச்சியினாலும், என் வாய் துதியினாலும் நிரம்பியிருப்பதாக. மகிழ்ச்சியும் துதியும் உம் பிரசன்னத்தின் நிரூபணமாக இருக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment