Scripture வேதவசனம்: சங்கீதம் 16:11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில்
பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Observation கவனித்தல்: பரலோகத்தப் பற்றிய எப்பேற்ப்பட்டதொரு சிந்தனை! நம் எதிர்காலம் மிகவும் பிரகாசமானது. அவருடைய சமூகத்தில் மகிழ்ச்சியும் நித்திய சந்தோசமும் உண்டு.
Application பயன்பாடு: ஆனால், அவர் என்னை அவரது வாசஸ்தலமாக தெரிந்து கொண்டு எனக்குள் வாழ்கிறார், எப்பொழுதும் நான் அவர் பிரசன்னத்திலேயே இருக்கிறேன் என்பதை கருதுகையில், அது முன்னதைக் காட்டிலும் சிறப்பானதொரு சிந்தனையாக இருக்கிறதல்லவா! நீர் என்னை மகிழ்ச்சியினால் நிரப்புவீர் என்பது மட்டுமல்ல, என்னை மகிழ்ச்சியினால் நிரப்பி இருக்கிறீர் என்றும் வருகிறது. நித்திய மகிழ்ச்சியை எதிர்நோக்கி வாழ்வது நல்லதுதான், ஆனாலும் இப்பொழுதே அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து வாழ்வது அதிலும் சிறந்தது ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மாலே நான் மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறேன். எனக்கு மகிழ்ச்சியை தருகிறவராக மட்டுமல்ல, நீரே என் மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்.ஆமென்
No comments:
Post a Comment