Scripture வேதவசனம்: சங்கீதம் 19:14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
Observation கவனித்தல்: 7-11 முதலான வசனங்களில் தேவனுடைய வார்த்தையானது எப்படி ஆத்துமாவை உயிப்பிக்கிறது என்றும், பேதையை ஞானியாக்குகிறது என்றும், இருதயத்தை மகிழ்ச்சியாக்கி, கண்களுக்கு குளிர்ச்சியானதாக இருக்கிறது என சங்கீதக்காரன் கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகள் அவருடைய வார்த்தைக்கு எல்லையை தீர்மானிப்பதாகவும், தேவன் சொன்னதே கர்த்தருக்கு ஏற்றதாக இருக்கும் என சிந்திக்கவும் செய்வதாக சங்கீதகாரன் நிச்சயமாக நினைத்திருப்பார்.
Application பயன்பாடு: என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் கவனிக்கும் எனது வார்த்தைகள் மட்டுமல்ல,
எவரும் அறியாத ஆனால் தேவன் மட்டுமே அறியக்கூடிய என் நினைவுகளும் கர்த்தருக்கு ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவர் எனக்குள் வசிப்பதால், நான் அவர் வசிக்க விரும்பத்தக்கனோக இருக்க வேண்டும். அவர் என் வார்த்தைகள் மற்றும் சிந்தனைகளைக் கவனிக்கும்போது, அது அவருக்குப் பிரீதியானதாக இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே நான் உம் தங்குமிடமாக இருக்கட்டும். நீர் எனக்குள் வசிப்பதில் உம்மை மகிழ்வுடன் இருக்கும்படிச் செய்ய எனக்கு கிருபை செய்யும். ஆமென்
No comments:
Post a Comment