Tuesday, February 11, 2014

அவர் அதை மனமாரச் செய்தார்

Scripture வேதவசனம்: லேவியராகமம் 17: 11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

Observation கவனித்தல்: பாவங்களுக்குப் பரிகாரமாக செலுத்த வேண்டிய பலிகளைக் குறித்து தேவன் மோசேயுடன் பேசிக் கொண்டிருந்தார். இங்கே நான் காண்பது: ஒரு மிருகத்தைக் கொல்வது அல்ல, ஒப்புரவாகுதலை உண்டு பண்ணும் அதன் இரத்தத்தைச் சிந்துவது ஆகும்.  
 
Application பயன்பாடு: மாம்சத்தைக் கொல்வது அல்ல, இரத்தத்தைச் சிந்துவதே என் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தியது. இயேசு எனக்காக சிந்திய இரத்தம் மாசற்றதும் பாவமற்றதும் ஆகும்.
 
Prayer ஜெபம்: ஆண்டவரே, என் பாவங்களை நீர் எடுத்துப் போட்டதற்காக எனக்காக நீர் பாவ பலியானதற்காக நன்றி. நான் அதற்கு என்றும் நன்றியுடையவனாக இருக்க உதவும். ஆமென்.

No comments:

Post a Comment