Scripture வேதவசனம்: லேவியராகமம் 19:34 உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில்
அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும்
எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Observation கவனித்தல்: தேவனுக்கு ஜனங்கள் முக்கியம். அந்நியர் இஸ்ரவேலர் நடுவில் வசிக்க வந்த போது, அவர்கள் இஸ்ரவேலில் பிறந்தவர்களைப் போல நடத்தப்பட வேண்டியதாயிருந்தது. இரு காரணங்கள் கொடுக்கப்பட்டது. முதலாவது, அவர்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்தார்கள், இரண்டாவதாக, தேவன் அவர்கள் அதை செய்ய வேண்டும் என விரும்பினார்.
Application பயன்பாடு: அநேக நேரங்களில், தவறு செய்யும் பிள்ளைகளை சரிசெய்ய முயலும் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை எனில், நான் சொல்வதைச் செய் என்று அவர்கள் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வார்த்தைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தேவனுடைய வார்த்தைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயமானது!
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் வார்த்தையானது உம் அன்பு, பரிசுத்தம் மற்றும் ஞானத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. உம் வார்த்தைகள் உம் அதிகாரத்தை சுமந்து வருகிறது. ஆமென்.
No comments:
Post a Comment