Wednesday, February 5, 2014

என் பங்கைச் செய்தல்

Scripture வேதவசனம்:  அப்போஸ்தலர்கள் 12:10  அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
(பீட்டர் ஜான் மாற்குவின் வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்த சபையாரிடம் சென்றார். வேலைக்காரப் பெண் கதவைத் திறக்க வந்தவள், பேதுருவைக் கண்டு திறக்காமலேயே மகிழ்ச்சியில் மற்றவர்களிடம் சொல்லப் போனாள்) 16. பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

Observation கவனித்தல்: சிறைச்சாலையின் கதவைத் திறந்த தேவதூதன் பேதுருவோடு கூட வந்திருந்தால், அவனே அவ்வீட்டின் கதவைத் திறந்திருப்பான். ஆனால் அவன் வரவில்லை. ஆகவே பேதுரு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். ஜெப கூடுகைக்குள் செல்வது சிறைச்சாலையில் இருந்து வெளிவருவதை விட கடினமானதாக இருந்தது.  அவர்கள் செய்ய முடியாததை தேவன் செய்தார், அவர்களால் செய்யக் கூடியதை அவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்த்தார்.
 
Application:   தேவனுடைய அனேக கிரியைகளில் அவர் மட்டுமே செய்யக் கூடியவைகளையும் நான் செய்ய வேண்டும் என அவர் எதிர்பார்க்கிற பகுதியும் இருக்கிறதை நான் பார்த்திருக்கிறேன். 5000பேரை போஷிக்க, தனது மதிய உணவை கொடுக்க விருப்பமாயிருந்த இளைஞனின் உணவை இயேசு பயன்படுத்தினார்.  இயேசு இரட்சிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் நற்செய்தியை அறிவிப்பது எனது செயல் ஆகும். தொடுவது எனது செயல், குணமாக்குவது அவர். சில வேளைகளில் கதவைத் திறப்பது மட்டுமே என் வேலை ஆக இருக்கிறது.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் உம் வேலையைச் செய்வதில் உண்மையுள்ளவர் என நான் அறிந்திருக்கிறேன். இன்று நான் என் வேலையைச் செய்வதில் உண்மையுள்ளவனாயிருக்க நீர் காணும்படி எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment