Monday, February 24, 2014

தேவன் பதில் அளிக்கும் ஜெபங்கள்

Scripture வேதவசனம்:    எண்ணாகமம் 14:19  உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
20. அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

Observation கவனித்தல்: இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தனர். தேவன் என்ன செய்வார் என்பதில் விசுவாசம் வைப்பதற்குப் பதிலாக, கானானியரைப் பற்றிய பயத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க விழைந்தனர். தேவன் அவர்களை வாதையினால் அழித்து, மோசேயை பெரிய ஜாதியாக்க ஆயத்தமாயிருந்தார் (வ.12). ஆனால் மோசே அவர்களுக்காக ஜெபித்தார். அவர் தேவனுடைய குணாதிசயத்தின் அடிப்படையில் ஜெபித்தார்.
இப்படிப்பட்ட சுயநலமற்ற ஜெபத்திற்கு தேவன் எப்படி பதில் அளிக்கிறார். அவர் வேண்டுகோளை ஏற்கிறார். அவர் அவருடைய கோபத்தின் படி செயல்படாமல், மோசேயின் வேண்டுகோளிற்கு பதில் கொடுத்தார்.
 
Application பயன்பாடு: நான் அடிக்கடி என் தேவை மற்றும் விருப்பங்களின் படியே ஜெபிக்கிறேன். மற்றவர்களின் தேவைக்காகவும் ஜெபிக்கிறேன். நான் தேவனுடைய தன்மையின் படி ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும். நான் அவருடைய தேவைகளின் படியும் அவருக்கு என்ன முக்கியமானவை என்றும் பார்த்து ஜெபிக்க வேண்டும்.
 
Prayer ஜெபம்:   பரிசுத்த ஆவியானவரே, நான் ஜெபிக்கும்போது என் சிந்தைகளை வழிநடத்தும். நீர் பதிலளிப்பதில் மகிழுபவைகளை, விரும்புபவைகளை நான் ஜெபிக்க உதவும். ஆமென்.
 

No comments:

Post a Comment