Friday, May 2, 2014

ஏழு எழுபது முறை

Scripture வேதவசனம்:  மத்தேயு 18:21  அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
22. அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

Observatio n கவனித்தல்: ஏழுமுறை மன்னிக்க வேண்டும் என்று தான் சொன்னதைப் பற்றி பேதுரு பெருமை உள்ளவனாக இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நடைமுறையில், மனிதர்கள் ஓரிருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே மன்னிக்கிறார்கள்.  ஆனால் பேதுரு ஏழு முறை மன்னிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஏழு முறை என்பது மனிதற்களுக்குச் சற்று கடினமானது தான். ஆனாலது எவ்வளவு கடினமானதாகத் தோன்றினாலும்கூட, அது இயேசுவின் எதிர்பார்ப்புக்கு சமீபமானதாக வர முடியாது. 
 
Application பயன்பாடு: மன்னிப்பது முக்கியம் என்பதைப் பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்தாரா? அப்படி  அல்ல. ஏனெனில், அவர் இவ்விதமாகவே என்னை நடத்தி இருக்கிறார். ஏழெழுபது முறை மட்டுமல்ல அதற்கும் மேலேயே அவர் என்னை மன்னித்திருக்கிறார். எனது பலத்தில் இது சாத்தியமில்லாதது. ஆனால் மன்னிப்பதில் சிறந்தவரை என்னுள் பெற்றிருக்கிறேன்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, மன்னிப்பதற்கு நீர் எனக்கு உதவும்படி நான் உம்மைச் சார்ந்து இருக்கிறேன். மன்னிக்கும் தன்மை என்னில் ஒரு பகுதியாக மாற எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment