Scripture வேதவசனம்: மத்தேயு 21:8 திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

Observation கவனித்தல்: இங்கே ஜனங்கள் இயேசுவை இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு வெளிப்படையான வாரிசாக, தாவீது ராஜாவின் மகனாக ஏற்றுக் கொள்கிறதை நாம் காண்கிறோம். சில நாட்களுக்குப் பின் பிலாத்து, “அப்படியானால் யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்” (மாற்கு 15:12-13)
அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்” (மாற்கு 15:12-13)
Application பயன்பாடு: இயேசு என் வாழ்வின் ராஜாவாக இருக்க தகுதியானவரா? அல்லது நான் விரும்புகிறபடி எதையும் செய்யும் அதிகாரத்தை குலைப்பவரா? என் வார்த்தைகளும் செயல்களுமே நான் ஜனக்கூட்டத்தின் எப்பக்கத்தில் இருக்கிறேன் என்பதை அடையாளங்காட்டுகிறது.
Prayer ஜெபம்: ஆண்டவரே, நீரே என் ஆண்டவரும் ராஜாவாகவும் இருக்கிறீர் என்பதை என் வார்த்தைகளும் செயல்களும் நிரூபிக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment