Sunday, May 11, 2014

என்னால் முடியாததுதான்...ஆனால்

Scripture வேதவசனம்:  2 சாமுவேல் 22:18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
19. என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
20. என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

Observation கவனித்தல்:  இந்த வேதபகுதியானது தேவன் தன்னை எதிரிகளிடமிருந்தும், தன்னைக் கொல்ல முயற்சித்த சவுலிடம் இருந்தும் தப்புவித்த பின்பு தாவீது பாடிய பாடல் ஆகும். தாவீதின் எதிரிகள் அவரைவிட பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் கர்த்தரைக் காட்டிலும் பலவான்கள் அல்ல.
 
Application பயன்பாடு: என் கண்களுக்கு என் எதிரிகள்  பலவான்களாகவும், என் பிரச்சனை தீர்க்க முடியாததாகவும், என் பிரச்சனைகள் தாங்கக் கூடாததாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தேவனுக்கு அப்படி அல்ல. தேவன் என்னில் பிரியமாயிருக்கிறபடியால், அவர் எனக்கு உதவி செய்ய விரும்புகிறார். எவ்வளவு ஆச்சரியமான உண்மை!

Prayer ஜெபம்:  கர்த்தாவே, சில நேரங்களில் என் வாழ்வில் உம் வல்லமை காணப்படும்படியாக  பிரச்சனைகளையும் சோதனைகளையும் நீர் கொண்டு வருகிறீர் என்பதை நான் காண்கிறேன்.

No comments:

Post a Comment