Scripture வேதவசனம்: 1 தெசலோனிக்கேயர் 5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
Observation கவனித்தல்: நாம் எப்படி வாழவேண்டும் என்று பவுல் சொல்கிற 14 காரியங்களை நான் இந்த வேதபகுதியில் காண்கிறேன்.
18ம் வசனம் அவ்ர் சொல்கிற 10வது காரியம் ஆகும். எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும், நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த சூழ்நிலைக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்லாமல் அந்த சூழ்நிலையில் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என பவுல் சொல்கிறார். நம் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் நித்யகாலமாக நன்றியுணர்வுடன் இருக்கும்படியான ஒன்றை நாம் பெற்றிருக்கிறோம். அவருடைய பிரசன்னம் மற்றும் வாக்குத்தத்தங்களை உடையவர்களாக நாம் இருக்கிறோம்.
Application பயன்பாடு: நன்றியுள்ளவனாக இருப்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது. நான் நன்றியுள்ளவனாக இருப்பது தேவனுடைய பார்வையில் நல்லதாக இருக்கிறது. என் சூழ்நிலை எதிர்மறையாக இருந்தாலும் நான் அவர் உண்மையுள்ளவர், நேசிக்கிறார் என்பதை அறிவிப்பதாக அது இருந்து அவரை கனப்படுத்துகிறது. நன்றியுள்ளவனாக இருப்பது எனக்கு நல்லது. அது என் பார்வையை என் கவலைகளில் இருந்து எடுத்து என் பெலனின் ஆதாரத்தை நோக்கி கவனம் வைக்க உதவுகிறது.
Prayer ஜெபம்: ஆண்டவரே நான் நன்றியுள்ளவனாக இருப்பத்தற்கு நீர் அனேக காரணங்களைத் தந்திருக்கிறீர். நான் எப்பொழுதும் உமக்கு நன்றியுள்ளவனாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment